ETV Bharat / international

ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டுவந்த விமானப்படை

டெல்லி: கொரோனா வைரஸால் தீவிரமான பாதிப்பிற்குள்ளாகி ஈரானில் சிக்கித்தவித்த 58 இந்தியர்களை இந்திய விமானப்படை மீட்டுவந்துள்ளது.

ஈரான்
ஈரான்
author img

By

Published : Mar 10, 2020, 1:14 PM IST

கொரோனா வைரஸை தடுக்க கடுமையாக தவித்துவரும் ஈரானில், சிக்கித்தவித்த இந்தியர்களை இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் பத்திரமாக மீட்டுவந்துள்ளது.

கொரோனா பாதிப்பானது ஈரானில் கடந்த 10 நாள்களாக தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதுவரை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், உயர்மட்டத் தலைவருக்கு நெருக்கமான நபர்களே நோய் பாதிப்பிற்குள்ளானது அரசு நடவடிக்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

ஈரான் நாட்டில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்துவரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்திய அரசு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது மேற்கொண்டுள்ளது.

இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள 58 இந்தியார்களை தற்போது மீட்டுவந்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'முதற்கட்ட நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சீனாவின் வுஹான் நகரில் சிக்கித்தவித்த இந்தியர்களை இதேபோல் விமானப்படை மீட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை சரிவு: 3 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவிற்கு சேமிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.