ETV Bharat / international

ஹாங்காங் போராட்டம்: தண்ணீரைப் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்கள் விரட்டல்! #HongKongProtest - #honkongprotest

ஹாங்காங்: தொடர்ந்து 13-வது வாரமாக ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததால்,கண்ணீர் புகைக்குண்டுகள், தண்ணீரைப் பீச்சியடித்து போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

hongkong protest
author img

By

Published : Sep 1, 2019, 6:21 PM IST

பிரிட்டிஷ் நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து பெற்ற பிராந்தியமாக ஹாங்காங் விளங்கி வருகிறது.

இந்நிலையில், ஹாங்காங் குற்றவாளிகளைச் சீனாவுக்கு நாடு கடத்தும் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்போராட்டங்களை எந்த ஒரு அமைப்பும் தலைமை வகிக்காமல் இளைஞர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வழிநடத்தி வருகின்றனர்.

சட்டத் திருத்த மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும், காவல்துறையின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் பல சமயங்களில் வன்முறையில் முடிகிறது.

இந்த நிலையில், தொடர்ந்து 13-வது வாரமாக நேற்று காலை அமைதியாக ஆரம்பித்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. காவல் துறையினரின் அமைந்திருத்த தடுப்புகள் மீது சில போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி அரசு கட்டடங்களைச் சூறையாட முயன்ற போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர்.

இதையடுத்து, காவல் துறையினர் மீது பெட்ரோல் கூண்டுகள் வீசப்படவே, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசியும், நீல நிற தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 800 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போராட்டங்களை சீன அரசு வன்மையாக கண்டித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.