ETV Bharat / international

இந்தியா, ரஷ்யா, பிரேசிலில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று.....பீதியில் உலக நாடுகள் - இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று

இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிவேகமாக அதிகரித்து வருவது மற்ற நாடுகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

coronavirus
coronavirus
author img

By

Published : May 20, 2020, 1:49 AM IST

சீனாவின் வூஹானில் நகரில் தோன்றிய கோவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நோய் காரணமாக இதுவரை 46 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்தி பொருளாதாரத்தை இயல்புக்குக் கொண்டுவரும் முயற்சியில் அந்நாடுகள் இறங்கியுள்ளன.

இதனிடையே, ரஷ்யா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தொற்றுப் பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது ஆயிரத்து 300 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், அந்நாட்டின் தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று லட்சத்தை அடைந்துள்ளது. கோவிட்-19ஆல் இதுவரை அங்கு இரண்டு ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு இரண்டாவது இடம்.

அதேவேளையில், ஆப்ரிக்க கண்டத்திலும் 54 நாடுகளில் இதுவரை 88 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் மட்டும் 16 ஆயிரத்து 400 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 240 பேர் பலியாகியுள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொருத்தவரை நான்கு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 31 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் மட்டும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனைகள் குறைவாக நடத்தப்பட்ட போதிலும் பிரேசில் இந்த எண்ணிக்கையுடன் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரை மூன்று ஆயிரத்து 100 பேர் கரோனாவுக்கு மடிந்துள்ளனர்.

இதனிடையே, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் முன்பிருந்ததைவிட பாதிப்பு எண்ணிக்கை மளமளவெனக் குறைந்து வருகிறது.

இதையும் படிங்க : அலுவலகத்தை அவசியமின்றி பூட்டவேண்டாம்: கரோனா வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.