உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகள் திணறிவருகின்றன. வைரஸுக்கான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இதுவரை உலகளவில் 3 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரத்து 103 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 65 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 28 லட்சத்து 21 ஆயிரத்து 437ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 802 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகப்பட்சமாக இந்தியாவில்தான் 86 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.