உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிரம் காட்டிவருகின்றன. இருந்தபோதிலும், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று (ஜூன் 24) மட்டும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 527 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95 லட்சத்து 88 ஆயிரத்து 356ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் நேற்று 5,008 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 83 ஆயிரத்து 957ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை இத்தொற்றால் 24,63,168 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,24,279 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், ரஷ்யா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பிரேசிலில் 11,92,474 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 53,874 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து ரஷ்யாவில் 6,06,881 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,513 பேர் உயிரிழந்தனர். இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, நாடு முழுவதும் நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க...சென்னையில் இன்று மட்டும் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு!