பாகிஸ்தான் நாட்டின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மன்சேரா மாவட்டத்தில், நான்கு பேருடன் சென்ற வாகனம் பனிச்சரிவில் சிக்கி புதைக்கப்பட்டது. அதன் காரணமாக வாகனத்திலிருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட தகவலில் நேற்றிரவே விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு மட்டும் இதேபோல 110 வாகனங்களில் சுற்றுலா பயணிகள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்தால் இந்தியாவுக்கு ஆபத்து-ராணுவத் தளபதி