ETV Bharat / international

கோரத்தாண்டவமாடும் ரஷ்யா: நடந்தே நாடு கடந்துவந்த மாணவர்கள் - உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பலமுனைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் அந்நாட்டு எல்லையிலிருந்து போலாந்துக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளனர்.

Russia Ukraine conflict  indian students leave chernivtsi  ukraine romanian border  indian students come ukraine romanian border  எல்லையை கடந்த மாணவர்கள்  போலாந்து சென்ற இந்திய மாணவர்கள்  உக்ரைன் ரஷ்யா போர்  உக்ரைனில் இந்திய மாணவர்கள்
நடந்தே நாடு கடந்த மாணவர்கள்
author img

By

Published : Feb 25, 2022, 10:05 PM IST

ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது தீவிரமடைந்துள்ளதால், இந்திய மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக தாயகம் அழைத்துவருவதற்கான முயற்சிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது.

இதில் ரஷ்யாவின் தாக்குதல் பெரும்பாலும் கிழக்கு உக்ரைனில் நோக்கி இருப்பதால், உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள லிவிவ், செர்னிவ்ஸ்டி ஆகிய நகரங்களில், இந்தியர்களை மீட்பதற்கான முகாம் அலுவலகங்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திறந்திருக்கிறது.

சில மாணவர்கள் நில எல்லை வழியே உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை இந்தியா அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் எல்லையில் உள்ள லிவிவ் நகரம், போலந்து நாட்டிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்றுவருகின்றனர். அவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்த வாகனம் மூலம் போலந்து எல்லை அருகே 40 மாணவர்கள் அனுப்பப்பட்டனர்.

போலாந்து எல்லையிலிருந்து ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவில் சாலையில் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் நடந்தே போலந்துக்குச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 'எப்படியாவது விரைவாக உதவி பண்ணுங்க' - உக்ரைனில் தவிக்கும் உசிலம்பட்டி மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.