ETV Bharat / international

உலகை அச்சுறுத்தும் கரோனா வைரசை அறிவோம் - கரோனா வைரஸ் சீனா

ஹைதராபாத்: சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona
corona
author img

By

Published : Jan 23, 2020, 10:56 AM IST

எபோலா, ஜிகா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சார்ஸ் என உலகத்தை உலுக்கும் வகையில் திடீரென்று வேகமாக பரவும் நோய்கள் அவ்வப்போது வந்து செல்லும்.

இந்த வரிசையில் புதிய வரவான கரோனா வைரஸ், தற்போது சர்வதேச நாடுகளையும் அச்சநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இறைச்சி விற்பனைச் சந்தையில் நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியில் இருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியிருக்கலாம் என அறியப்படுகிறது.

முகமூடியுடன் திரியும் பயணிகள்
முகமூடியுடன் திரியும் மக்கள்

ஏன் இந்த திடீர் பதற்றம்?

கடந்த மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் திடீரென காய்ச்சல் ஒன்று பரவத் தொடங்கியது. அந்த காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அண்டை மாகாணங்களான ஷாங்காய், பெய்ஜிங், சியாங் ஆகிய பகுதிகளிலும் இது வேகமாகப் பரவியது.

சீனாவில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவில் இந்நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே உலக நாடுகளுக்கு அலாரம் அடித்தால் போல், பரபரப்புத் தொற்றிக்கொண்டது.

சீனாவுக்குப் பயணம் செய்த வெளிநாட்டினர் பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெள்ள மெள்ளத் தெரியவந்தது. பயணிகள் விமானம் மூலம் வைரசும் பயனம் செய்து தற்போது அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், தைவான், தாய்லாந்து, மெக்ஸிகோ என பல்வேறு நாடுகளில் இந்த நோய் தீவிரமாகப் பரவி வருகிறது.

சீனாவில் மருத்துவ அவசர நிலை
சீனாவில் மருத்துவ அவசர நிலை

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அனைத்து நாட்டு அரசுகளும் தங்கள் விமானநிலையங்களை உஷார் நிலையில் வைத்து பயனிகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றன. சீனாவில், வூகான் மாகாணம் உள்ளிட்ட நோய் பரவியுள்ள முக்கிய பகுதிகளில், பொதுப்போக்குவரத்து வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அது என்ன கரோனா?

நோய் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் கிரீடம், சூரியனின் வளையம் போன்று தோற்றமளிக்கும் வைரஸ் ஒன்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. சூரியனின் வளையப்பகுதியான கரோனா என்பதிலிருந்து, இந்த வைரசுக்கு கரோனா வைரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு சார்ஸ்(SARS) எனப்படும் தீவிர மூச்சுவிடும் சிக்கல் நோயால் பாதிப்புக்குள்ளாவார்கள்.

Etv - Bharat
கரோனா வைரஸ்

நோய் அறிகுறி:

சளி, தீவிர இருமல், தீவிரக் காய்ச்சல், முச்சுத் திணறல் ஆகியன இந்நோய்க்கு அறிகுறிகள். நோய் தீவிரத்தன்மை அதிகரித்தால் மூச்சுத் திணறல் நிமோனியா நோயாகும் வாய்ப்புகள் அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை செயலிழக்கும் அபாயமும் உள்ளது. இந்த வைரஸ், பாம்புகள் அல்லது வௌவால்கள் மூலம் பரவத் தொடங்கியிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்து என்ன?

உலகச் சுகாதார மையம் நோய் குறித்து ஆலோசிக்க அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. இந்நோய் எபோலா, சார்ஸ் போன்று வேகமாக அதிக உயிரிழப்புகளை உருவாக்கவில்லை. எனினும், மிதமான தன்மையுடன் இந்நோய் வேகமாக உலகம் முழுவதும் பரவுவதைத் தடுக்க பொது சுகாதார அவசர நிலையை சர்வதேச அளவில் கொண்டுவர வேண்டுமா என உலக சுகாதார நிலையம் ஆலோசிக்க உள்ளது.

இந்நோயக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தங்கள் சர்வதேச விமான நிலையத்தில் தீவிர சோதனைகளுக்குப் பின்பு வெளிநாட்டுப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கின்றன.

விமான நிலையத்தில் பயனிகள் பரிசோதணை
விமான நிலையத்தில் பயனிகள் பரிசோதணை

நோயின் தொடங்கப்புள்ளியான சீனாவில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டு, அவசர நிலை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020-21: விவசாயிகளுக்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதார நிபுணர் யோசனை!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.