நேபாளம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பருவமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இமயமலையை ஒட்டியுள்ள 28 மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன.
இதில், சிக்கித் தவித்த ஆயிரத்து 146 பேரை காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்டனர். இதுவரை 65 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் மாயமாகியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Nepal floods Floods in Nepal Nepal Meteorological Forecasting Division Ram Bahadur Thapa காத்மாண்டு நேபாளம் கனமழை வெள்ளப்பெருக்கு பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3842024_nepalll.jpg)
குறிப்பாக, ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் மாகாணங்களில் கனமழை காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அனைத்து மாகாண அரசுகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டுவருகின்றன.