கம்திஷ் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த ஜூலை 28ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் 12 கிமீ நிளமுள்ள சாலை பாதிக்கப்பட்டுள்ளது. 173 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நூரிஸ்தான் எம்.பி. இஸ்மாயில் அடிகன் கூறுகையில், "மக்கள் மோசமான சூழ்நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு அவசர உதவி தேவை. அவர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டனர்" என்றார்.
நூரிஸ்தான் ஆளுநர் ஹபிஸ் அப்துல் கூறுகையில், "பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துவருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எங்கள் குழுவினர் சென்றுள்ளனர். " என்றார்.
இதையும் படிங்க: தலிபான்கள் சாதாரண குடிமக்கள்- இம்ரான் கான்