இது தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிவிப்பில், "ஜமாத்-உத்-தாவா, ஜெய்ஷ்-இ-முகமது, தலிபான், டேஷ், ஹக்கானி குழுமம் மீது பொருளாதார விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மறைந்திருக்கும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் அனைருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் மகாராஷ்ரா மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம், அவரது கூட்டாளிகளும் அடங்குவர்.
தாவூத் இப்ராஹிமால், 1993ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இந்தியா சேர்ந்தது.
பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force), 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சேர்த்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்த 2019ஆம் ஆண்டு இறுதி காலக்கெடுவை நிர்ணயித்தது. சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் சர்வதேச தரங்களை நிதி நடவடிக்கை பணிக்குழு அமைத்துள்ளது. மேலும், பேரழிவு ஆயுதங்களுக்கான நிதியுதவியை நிறுத்த எஃஏடிஎஃ (FATF) செயல்படுகிறது.
இதனிடையே, லஷ்கர்-இ-தைபா, ஜெய்ஷ் முகமது, பாகிஸ்தானின் இஸ்லாமிய பாரம்பரிய சங்கத்தின் மறுமலர்ச்சி, அல்-ஹர்மெய்ன் அறக்கட்டளை இஸ்லாமாபாத், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய தெஹ்ரிக், இஸ்லாமிய தெஹ்ரிக் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.