பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலை பாகிஸ்தான் இரண்டாவது முறையாக பின்பற்றவில்லை என்றும் இந்த விவகாரத்தில் அந்நாடு தோல்வியடைந்திருப்பதாகவும் ஃபிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஜனவரி மாத கெடுவுக்குள் செயல்படுத்த வேண்டிய பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், மே மாதம் இரண்டாவது கெடுவிலும் பாகிஸ்தான் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மூன்றாவது முறையாக அக்டோபர் வரை பாகிஸ்தானுக்கு கெடு அளிக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்படாமல் போகும் பட்சத்தில், பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்க உலக நாடுகளுக்கு பரிந்துரை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாகிஸ்தான் அரசு கடுமையான சர்வதேச நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.