பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி ஜர்தாரி, போலி வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தேசிய பொறுப்புடைமை ஆணையம் அந்தக் கணக்குகள் மூலம் ஜர்தாரி சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ரூ.15 கோடி வரை பணப் பரிமாற்றம் செய்தது கண்டறியப்பட்டது. இவ்வழக்கில் ஜர்தாரியும், அவரது சகோதரி ஃபர்யால் தால்பூரும் கடந்த மாதம் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 'பார்க் லேன்' என்ற மற்றொரு ஊழல் வழக்கில் இருவரையும் தேசிய பொறுப்புடைமை ஆணையம், ஜூலை 1ஆம் தேதி கைது செய்தது. இதுதொடர்பாக பொறுப்புடைமை நீதிமன்றம் ஒன்றில் நேற்று நடந்த விசாரணையில், ஆசிப் அன்சாரியை 13 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பார்க் லேன் வழக்கு :
கராச்சியில் அமைந்துள்ள நிறுவனம் பார்க் லேன் எஸ்டேட். அரசு அலுவலர்களின் உதவியோடு, ஆசிப் அலி ஜர்தாரி அரசுக்குச் சொந்தமான வனப்பகுதியைச் சட்டவிரோதமாக அந்நிறுவனத்துக்கு எழுதிக்கொடுத்ததாக தேசிய பொறுப்புடைமை ஆணையம் அவர் மீதும் அவரது மகன் பிலால் பூட்டோ ஜடாரி மீதும் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில், பிலால் பூட்டோ ஜடாரி நிரபராதி என கடந்த மாதம் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.