சீனாவின் பிரபல நாஞ்சிங் பல்கலைக்கழகம், மாணவர்கள் சேர்க்கைக்கு கையாண்ட யுக்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜுன் 7 ஆம் தேதி, கல்லூரியில் நுழைவுத்தேர்வு நடந்தது. மாணவர்களை வரவழைப்பதற்காக, பதாகைகளுடன் இரண்டு பெண்கள் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் கல்லூரி நிர்வாகம் பதிவிட்டிருந்தது. அதிலிருந்த வாசகங்கள், பிரபல பல்கலைக்கழகம் இப்படிச் செய்யலாமா என்ற கேள்விகளை முன்வைக்கின்றனர்.
அதில் ஒரு பெண், "காலை முதல் இரவு வரையில் என்னுடன் நூலகத்தில் இருக்க விரும்புகிறீர்களா?" என்றும், மற்றொரு பெண், " நான் உங்கள் இளமையின் ஒரு அங்கமாக மாற விரும்புகிறீர்களா?" என்றும் அடங்கிய வாசகங்களுடன் போஸ் கொடுத்தனர்.
இவ்விவகாரம் விஷ்வரூபம் எடுத்திட, சர்ச்சைக்குள்ளான போஸ்டரை கல்லூரி நிர்வாகம் நீக்கியது. இதற்கு பல்வேறு சமூகத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.