ETV Bharat / international

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஹாங்காங் வழக்குகளை இனி சீனா விசாரிக்கும்

ஹாங்காங்: தேசிய பாதுகாப்பு தொடர்பான சில அரிதான ஹாங்காங் வழங்குகளை மட்டும் இனி சீனா விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hong Kong National Security
Hong Kong National Security
author img

By

Published : Jun 15, 2020, 7:42 PM IST

பிரிட்டன் நாட்டிலிருந்து 1997ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஹாங்காங், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற அனைத்துத் துறைகளையும் மக்களால் ஹாங்காங் அரசே நிர்வகித்துவருகிறது.

இருப்பினும், ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சீனா தொடர்ந்து பல்வேறு சட்டங்களை இயற்றுகிறது. இந்நிலையில் ஹாங்காங் தேசிய பாதுகாப்பு மசோதாவை சீன அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

அந்தச் சட்டம் குறித்து மூன்று நாள்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பான சில அரிதான ஹாங்காங் வழக்குகளை மட்டும் இனி சீனா விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீனாவின் ஹாங்காங் நகருக்கான துணைத் தலைவர் டெங் ஜொங்குவா கூறுகையில், "இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் பெரும்பாலான அதிகாரங்களும் கடைமைகளும் ஹாங்காங் நகர பாதுகாப்பு அமைப்புகளுக்கே இருக்கும்.

இருப்பினும், சீனாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கும் சில அரிதான வழங்குகளை மட்டும் இனி சீனா விசாரிக்கும்" என்றார்.

தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றியபோதே ஹாங்காங்கின் சிறப்புத் தகுதிகளை இதன் மூலம் முடிவுக்குவரும் என்றும் சீனாவின் நேரடி ஆதிக்கம் ஹாங்காங்கில் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர். ஆனால், அப்போது சீனா இதை முற்றிலுமாக மறுத்திருந்தது.

இந்நிலையில், தற்போது டெங் ஜொங்குவா கருத்து ஹாங்காங் நகரில் சீனாவின் ஆதிக்கம் செல்லுபடியாகும் என்பதை காட்டும் வகையில் உள்ளது.

இதையும் படிங்க: இனவெறிக்கு எதிரான போராட்டம் - இத்தாலியில் சேதப்படுத்தப்பட்ட ஊடகவியலாளரின் சிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.