பிரதமர் மோடியுடனான மாமல்லபுரம் உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங், தற்போது நேபாளம் சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பந்தாரியா ஜின்பிங் சீதால் நிவாஸ் ( நேபாள் அதிபர் மாளிகை) இன்று சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, சீனாவின் ஒரே நாடு கொள்ளைக்கு ஆதரவளிக்கும் நேபாளத்திற்கு பாராட்டு தெரிவித்த அதிபர் ஜின்பிங், அந்நாட்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உறுதியளித்துள்ளார். இந்த நிதி உதவியானது 2020-22 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க : சீனர்களுக்கு இ-விசா கட்டுப்பாடுகள் தளர்வு!