ETV Bharat / international

செவ்வாய்க் கிரகத்திற்கு ரோவரை அனுப்பும் சீனா - வரிசையில் ரெடியாக காத்திருக்கும் இரண்டு நாடுகள்! - செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் சீனா

பெய்ஜிங்: செவ்வாய்க் கிரகத்திற்கு மூன்று நாடுகள் ராக்கெட் அனுப்ப தயாராகவுள்ள நிலையில், சீன அரசு ரோவரை ராக்கெட் மூலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறக்கத் தயாராகி வருகிறது.

rover
rover
author img

By

Published : Jul 17, 2020, 11:46 PM IST

உலகளவில் பல நாடுகளுக்கு, செவ்வாய்க் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்புவது கனவாக தான் இருக்கும்‌. இதுவரை, செவ்வாய்க் கிரகத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே; அதை எட்டு முறை செய்து அசத்தியுள்ளது.

தற்போது, இந்த வரிசையில் இணைவதற்காக சீனா, ஐக்கிய அரபு அமீரகம் தயாராகி வருகிறது. செவ்வாய்க் கிரகம் பூமிக்கு அருகில் வருவதைப் பயன்படுத்தி கொண்டு, சீன நாடு, தியான்வேன் 1 விண்வெளி திட்டத்தின்படி, லாங் மார்ச் -5 கேரியர் ராக்கெட்டை செலுத்தி செவ்வாய்க் கிரகத்தில் ரோவரைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது‌.

இந்த ராக்கெட் ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் செலுத்தப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன விஞ்ஞானிகள் பல காலங்களாக இத்திட்டத்திற்காக அயராது உழைத்து வருகின்றனர்.

முன்னதாக, 2011ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் இணைந்து, செவ்வாய்க் கிரகப் பயணத்தில் சீனா ஏவிய ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. செவ்வாய்க் கிரகம் திட்டத்திற்குப் பயண தூரம் தான் பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

ஆனால், தற்போது செவ்வாய்க் கிரகமும், பூமியும் சூரியனின் ஒரே பக்கத்தில் சிறந்த சீரமைப்பில் உள்ளதால், பல நாடுகள் ராக்கெட் அனுப்புவதில் மும்முரம் காட்டுகின்றனர். இதனால் பயண நேரமும், எரிபொருள் பயன்பாடும் குறைகின்றன.

இத்தகைய வாய்ப்பு 26 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, அமெரிக்கா அரசு பெர்செவெரன்ஸ் என்ற கார் அளவிலான ஆறு சக்கர ரோவரை அனுப்பி பாறை மாதிரிகளை சேகரிக்கத் திட்டமிட்டுளள்து.

இந்த ராக்கெட் ஏவுதல், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 15க்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம் தனது முதல் கிரகணப் பயணத்தை வரும் திங்களன்று ஜப்பானிலிருந்து செலுத்தத் திட்டமிட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் ராக்கெட்டை அரபு மொழியில் அமல் அல்லது “ஹோப்” என அழைக்கின்றனர். இந்த ராக்கெட் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குவதற்குப் பதிலாக சுற்றி வரும் வகையில் வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.