ETV Bharat / international

கொரோனா நிவாரணம்: இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனா - இந்திய விமானப்படை கொரோனா வைரஸ்

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா பாதிப்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ள இந்திய விமானப்படை விமானத்திற்கு சீனா ஒப்புதல் கொடுக்க மறுத்து வருகிறது.

China
China
author img

By

Published : Feb 22, 2020, 12:07 PM IST

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இழக்கச் செய்துள்ளது. இந்நோயின் பிறப்பிடமான சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் மட்டும் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோயின் தீவிரத் தன்மை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. சர்வதேச நாடுகளுக்கும் இந்நோய் பரவிவரும் நிலையில் சீனாவுடனான விமான போக்குவரத்துக்குத் தற்காலிகத் தடையை சர்வதேச நாடுகள் விதித்துள்ளன.

வூஹான் பகுதியில் வசிக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் மீட்டுள்ள இந்திய அரசு, அங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வருவதாக சீனாவுக்கு உறுதியளித்தது.

இதற்காக இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் வூஹானுக்குச் செல்ல அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. நிவாரணப்பொருட்களை ஏற்றிச் சென்று, தேவையான உதவிகளை மேற்கொள்ளப் போவதாக இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய விமானத்திற்கு அனுமதியளிக்க சீன அரசு காலம் தாழ்த்திவருவதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கோரிக்கை தொடர்ச்சியாக மறுக்கப்படுவது வருத்தத்திற்குரிய செயல் என இந்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கால்நடைகளுக்காக வாழ்வை அர்ப்பணித்த பொறியாளாரின் அன்பு பயணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.