ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனைச் சேர்ந்த யாராகா பெய்ல்ஸ் என்பவரின் மகன் குவாடன் (9). குவாடன், அச்சோண்ட்ரோபிளாசியா (Achondroplasia) என்ற எலும்பு வளர்ச்சிக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்.
அதனால் குவாடன் சராசரி சிறுவர்களைவிட உயரம் குறைவாகயிருப்பார்.
இதனால் சக மாணவர்களால் கிண்டல், கேலிக்கு ஆளானார். அதில் மனமுடைந்த குவாடன், பள்ளியைவிட்டு வீடு திரும்பும் வேளையில், “தனது தாயிடம் யாராவது என்னைக் கொல்லுங்க, என் இதயத்தைக் குத்திக் கிழிங்க” என கதறி அழுத்துள்ளார்.
அதைக்கேட்டு மனமுடைந்த தாய், அதைப்பதிவு செய்து 'எனக்கு ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்ளத் துடிக்கும் மகன் கிடைத்துள்ளார்' எனக் கூறி, ட்விட்டரில் பதிவிட்டு தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார். அது வைரலானது.
இதையடுத்து லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்தனர். ஹக் ஜேக்மேன், ஜெஃப்ரி டீன் மோர்கன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் குவாடனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். துவார்ஃபிசம் எனப்படும் வளர்ச்சிக் குன்றிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிராட் வில்லியம்ஸ் தனது காணொலியில் ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் குவாடனை கவுரவிக்க கோ பவுண்ட் மீ என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு அந்த சிறுவனை டிஸ்னிலேண்டிற்கு அனுப்பவுள்ளார்.
இந்த அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் டாலர்கள் மட்டுமே வசூல் செய்ய வில்லியம்ஸ் முடிவு செய்தார். ஆனால் அவருக்கு 4.75 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3.40 கோடி ரூபாய்) குவிந்துள்ளது.
இதனையடுத்து, குவாடன் அந்தப் பணம் மொத்ததையும் ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு அனுப்புமாறு கூறினான்.
குவாடனின் இந்தச் செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பாதுகாப்பு காவலருடன் நடனமாடிய ரோட்ரிக்ஸ் - வைரல் காணொலி!