கராச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிர் இழந்தனர். இது குறித்து மூத்த காவல் அலுவலர் அல்தாப் உசேன் கூறுகையில், “கட்டட இடிபாடு குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதிக்கு விரைந்துவந்தோம். கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
முதலில் ஒரு சடலம் மட்டும் தென்பட்டது. அதன்பின்னர் அடுத்தடுத்து சடலங்கள் தென்பட்டன. இந்த கட்டடத்தை ஆபத்தான பகுதி என்று மார்ச் மாதமே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் குடியிருக்க வேண்டாம் எனவும் இங்கிருந்து வேறு இடத்துக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது கட்டட விபத்து நடந்துள்ளது. இந்தக் கட்டட விபத்தில் ஏழு ஆண்களும், ஐந்து பெண்களும் ஒரு குழந்தையும் உயிர் இழந்துள்ளனர். கட்டட விபத்து தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது” என்றார்.
கராச்சியில் மார்ச் மாதம் நடந்த மற்றொரு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிழக்கு லடாக் விவகாரம்: இரு நாடுகளும் எல்லை வகுப்பது அவசியம்!