சர்வதேச அளவில் கரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவருகிறது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக, விக்டோரியா தலைநகர் மெல்போர்னில் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த ஜூலை 7ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு சுமார் 110 நாள்களாக அமலில் உள்ள நிலையில் தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 27 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 905 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் சுமார் 90 விழுக்காடு விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: நள்ளிரவு ஊரடங்கை அமல்படுத்திய ஸ்பெயின்