ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள நார்த்வெஸ்ட் பகுதியில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. அதன் கார் நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென பொதுமக்களை கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவனை சுட்டுக்கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் பேசுகையில், ''வணிக வளாகத்தில் ஏற்பட்ட சூழலை ஆராய்ந்து வருகிறோம். காயமடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது'' எனத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: 'கூகுள் மீட் செயலியில் தினமும் புதிதாக 30 லட்சம் மக்கள்' - சுந்தர் பிச்சை!