ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கட்டுக்கடங்காது காட்டுத் தீ பரவிவருகிறது. இதனால், அந்நாட்டில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாகாணமே ஸ்தம்பித்துள்ளது.
'பேரழிவை விளைவிக்கும் காட்டுத் தீ தீவிரமடைந்துவருகிறது' என நியூ சவுத் வேல்ஸ் ஊரகப் பகுதி தீயணைப்புத் துறை ஆணையர் ஷேன் பிட்ஸ்மோன்ஸ் கவலை தெரிவித்தார்.
காட்டுத் தீ காரணமாக, சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் வெப்பநிலை 47 டிகிரியை தொட்டது. நியூ சவுத் வேல்ஸில் வீசும் பலத்த காற்று காரணமாக காட்டுத் தீ மேலும் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக, இந்த மாகாணத்தில் அவசரநிலை பிரடனப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து 200 தீயணைப்புப் படையினர் 100-க்கும் அதிகமான பகுதிகளில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.
காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், 15-க்கும் அதிகமான வீடுகள் நாசமானதாகவும் ஆஸ்திரேலியா அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் போதில்லாமல் இந்த ஆண்டு கோடைகாலத்துக்கு முன்பே ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இந்த காட்டுத் தீ சம்பவங்களில் இதுவரை 30 லட்சம் ஹேக்டேர் காடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
இதையும் படிங்க : சிரியாவில் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல்