ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஹவா அலாம் நுரிஸ்தானி, 50.64 விழுக்காடு வாக்குகள் பெற்று அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நடைபெற்று ஐந்து மாதங்கள் ஆன பிறகும்கூட முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இதையடுத்து, தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் அப்துல்லா குற்றஞ்சாட்டியிருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால், அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக, தலிபான் பயங்காரவாத அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு ஆப்கான் அரசிடம் தலிபான் இயக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில் இது பிரச்னையாக வெடித்தது.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருந்தபோதிலும், அமெரிக்கா தலையிட்டு கானியை அதிபராக அறிவிக்க உதவியது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு