கடந்த அக்டோபரில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அல்ஜீரிய அதிபர் அப்துல்மஜ்த் டெபவுன் ஜெர்மனிக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒரு மாதகாலமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது தனது நாட்டிற்கு திரும்பவுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "கரோனாவிலிருந்து மீண்டுவருவதை மக்களிடம் உறுதிப்படுத்துகிறேன். அடுத்த சில நாள்களில் தாய் நாட்டிற்கு திரும்பவுள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ அணியின் ஆலோசனைப்படி, ஜெர்மனி மருத்துவமனையிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பியபோதிலும், கரோனா வழிமுறைகளை அவர் பின்பற்றவுள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல், அவர் அதிபராக பதவி வகித்துவருகிறார்.