ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா பாதுகாப்பு படையினர் அன்மையில் நாடு திரும்பினர். 20 ஆண்டுகால போரை முடித்துவைப்பதாகக் கூறி, ஜோ பைடன் இந்த படை விலகல் நடவடிக்கையை அவசர அவசரமாக மேற்கொண்டார்.
அமெரிக்க படை விலகல் நடவடிக்கையை அடுத்து, அங்கு அதிபராக இருந்த அஸ்ரஃப் கனியின் ஆட்சி கலைந்து, தாலிபான் ஆட்சி மீண்டும் வந்துள்ளது. இது சர்வதேச அரங்கில் பெரும் அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இது சர்வதேச பாதுகாப்பிற்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என பாதுகாப்புத்துறை சார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ராணுவ தளபதி மார்க் மெய்லி முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர், "ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கரவாத இயக்கங்கள் வளர்ந்து தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. இன்னும் ஆறு மாதத்திலோ, இரண்டு மூன்று ஆண்டிலோ அல்கொய்தாவோ அல்லது ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்பு உருவெடுக்க பெரும் சாத்தியங்கள் உள்ளன.
எனவே, எதுவும் நடக்கலாம் என்ற சூழலில் அமெரிக்க குடிமக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை" என்றார்.
இதையும் படிங்க: துனிசியாவில் முதல் பெண் பிரதமர் தேர்வு