ETV Bharat / international

அமெரிக்காவை வெளியேற்ற தாலிபானோடு அல்கொய்தா கூட்டு - புவிசார் அரசியல் போர்

author img

By

Published : Nov 10, 2020, 9:19 PM IST

காபூல் : தோகா அமைதி ஒப்பந்தத்தை விரைந்து அமல்படுத்துவதை உறுதி செய்திடவே ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா அமைப்பு மௌனம் காப்பதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் அப்துல் சயீத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை வெளியேற்ற தலிபானோடு அல்கொய்தா கூட்டு - புவிசார் அரசியல் போர்

இது தொடர்பாக ஆசியா டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், "2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க - தாலிபான் இடையே கடும் போர் நடந்து வந்த நிலையில் அதனை முடிவிற்கு கொண்டுவர ஆப்கான் அரசு முனைந்தது. இதனையடுத்து, அந்த நாட்டு அரசின் முன்னெடுப்பில் தாலிபான்களுடன் அமெரிக்க அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி 29ஆம் தேதியன்று இரு தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்தது. இந்த தோகா அமைதி ஒப்பந்தத்தை தாலிபன்கள் நடைமுறைப்படுத்தினால் ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவத்தையும், நேட்டோ படைகளையும் அடுத்த 14 மாதங்களில் வெளியேற்றுவோம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

தாலிபான் இயக்கத்துடனான அமெரிக்க அரசின் சமாதான ஒப்பந்தத்தில் உள்ள இந்த "முக்கிய உட்பிரிவை" மனதில் வைத்தே அமைதியாக இருக்க அல்-கொய்தா ஒப்புக்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெறுவது தாலிபான்களை அதிகாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் முழுமையான அதிகாரமே அங்கு இஸ்லாமிய அரசை நிறுவ உதவிடும் என்றும் தாலிபான் கருதுகிறது.

அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைக்கு வருவதற்காகவே அல்கொய்தா அமைப்பு அமைதிக் காக்கிறது. தாலிபான் இயக்கம், வெறுமனே இந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இது தொடர்பாக நீண்டகால நட்பு அமைப்பான அல்-கொய்தாவிடம் கலந்துரையாடியே ஒப்புக்கொண்டது. அல் கொய்தாவுடன் தாலிபான் கலந்தாலோசித்ததை ஐ.நா கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஃபிட்டன்-பிரவுன் உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து அண்மையில் நடந்த ஆன்லைன் கருத்தரங்கில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாத குழுவின் முதன்மை தலைவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவை திருப்திப்படுத்தவும், அதன் துருப்புக்களை ஆப்கான் மண்ணிலிருந்து அகற்றவும் தாலிபான்கள் இந்த தந்திரத்தை அல்கொய்தா அமைப்புடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

அல்-கொய்தா போன்ற பிற பயங்கரவாத குழுக்களுடன் உள்ள உறவை துண்டிக்க தாலிபான் ஒப்புக்கொண்டிருந்தாலும் அதனை மீறும் வகையிலேயே மறைமுகமாகவும், நேரடியாகவும் செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறிய பின்னர் இறுதியில் அங்கு ஆட்சியை அமைப்பதற்கு தாலிபான்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இப்போது ஆப்கான் நாட்டில் சுமார் 5,000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன. 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவை 2,500ஆக குறையும். அது குறையும் நேரத்தில் அங்கு மீண்டும் அல்கொய்தா முழுவீச்சில் இயங்கும். ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா இருப்பைப் பற்றி எழும் கேள்விகளுக்கு தாலிபான் தரப்பு மறுப்பை மட்டுமே கூறிவந்தாலும், அவற்றை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதிக் குழு முழுமையாக மறுதலிக்கிறது.

அதன் மிகவும் நம்பகமான அறிக்கைகள், அங்கு அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ்., போன்ற தீவிரவாத குழுக்கள் இயங்கிவருவதை உறுதிப்படுத்துகிறது. தாலிபான்கள் தங்களது நெருங்கிய வரலாற்று உறவுகளை மதிக்க அல்-கொய்தாவுக்கு "முறைசாரா உத்தரவாதங்களை" வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

காஷ்மீரில் ஒரு மறைமுக அடையாள இருப்பை நிறுவுவதற்கான அல்-கொய்தாவின் முயற்சியாக தற்போதைய அமைதியை நாம் காண வேண்டும். இது அமெரிக்காவுடனான தாலிபான் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது. இப்பகுதியில் தலிபான்களுக்கு அல்-கொய்தாவின் "மிக முக்கியமான திறஞ்சார்ந்த பங்காளியாக" இருப்பது எதிர்பாராத பல நிகழ்வுகளை அங்கு நிகழ்த்தும்" என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.