ஆப்கானிஸ்தானின் கோர் (ghor) மாகாணத்தில் சில தினங்களாக கனமழை பெய்துவந்தது. இதன் காரணமாக மாகாணத்தின் தலைநகர் ஃபிரோஸ் கோஹாவிலும் டோலாக், ஷாராக் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, பெருத்த சேதத்தையும் சந்தித்துள்ளது.
இந்நிலையில், இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் குலாம் நசீர் காஜி தெரிவித்தார்.
இந்த வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.