வியட்நாம் நாட்டில் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக கடும் மழை பெய்து வருவதால் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் இயற்கைப் பேரிடர் தடுப்பு ஆணையம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வியட்நாமில் இதுவரை சுமார் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், வெள்ள பாதிப்பு, நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
வியட்நாமில் விவசாயம் முக்கியத் துறையாக உள்ள நிலையில், இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. அடுத்த சில நாள்களுக்கு வெள்ளப்பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அந்நாட்டு அரசு உயர்நிலைக் குழு, கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டது.
இதையும் படிங்க: 20 அடி நீள முடி கொண்ட 103 வயது முதியவர் உயிரிழப்பு!