டெல்லி: இயந்திரங்களின் வருகையால் மனிதர்களின் உதவி வரும் காலங்களில் குறையும் என்று உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
97 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் வெளிவரக்கூடும் என்று ‘வருங்கால வேலைவாய்ப்பு அறிக்கை 2020' இன் தரவுகள் குறிப்பிட்டுள்ளது. அவை மனிதர்கள், இயந்திரங்கள் இடையிலான போட்டியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
"தற்போதைய வேலைகளின் எண்ணிக்கை அளவு உருவாக்கப்பட்ட 'நாளைய வேலைகள்' எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என்றாலும், முந்தைய ஆண்டுகளுக்கு மாறாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமாகியிருக்கிறது. அதே நேரத்தில் வேலைக்கான மனித உதவி குறைந்ததுவருகிறது.
2025ஆம் ஆண்டளவில், அதிகப்படியான பணிநீக்கப் நடவடிக்கைகள் இருக்கும் என்றும், 15.4 விழுக்காட்டிலிருந்து, 9 விழுக்காடாக பணியாளர்களின் உள்ளீடு குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
"இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2025ஆம் ஆண்டளவில், மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான தொழில் ரீதியிலான மாற்றத்தால், 85 மில்லியன் வேலைகள் இடம்பெயரக்கூடும்" என்று மதிப்பிடப்பட்டுள்ளது.