ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று(நவ.28) காலை இரண்டு காந்த குண்டுகள் (magnetic bombs) வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் எவ்வித உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், சுமார் ஏழு பேர் காயம் அடைந்ததுள்ளதாக, ஆப்கன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த பயங்கவாத குழுக்களும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பு நிகழ்வில், ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (AIHRC) ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.