ஜப்பானில் உள்ள ஹொன்ஷு என்ற இடத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தெற்கு கடற்கரையிலிருந்து 38.6 கிமீ தொலைவில் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் புகுஷிமா மற்றும் மியாகி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான் நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.