ஜாபா மாகாணத்திலுள்ள காகர்விட்டா நகரிலிருந்து தலைநகர் காத்மாண்டுவுக்கு இன்று காலை பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, தாடிங் மாவட்டத்திலுள்ள திரிஷூலி ஆற்றை கடக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், படுகாயங்களுடன் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும், படுகாயமடைந்த 28 பேரில் 14 பேர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தாடிங் மாவட்டத்திலுள்ள மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.