இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானில் கரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாளிலிருந்து கடந்த புதன்கிழமை வரையிலான காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 253 சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 92 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், 125 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 33 பேர் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுள் 83 பேர் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இதுபோன்று, சிந்து, கைபர் பக்துன்வா, பலுசிஸ்தான், இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் மாகாணங்களில் முறையே 56, 30, 32, 31, 4, 17 சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 11 ஆயிரத்து 429 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 237 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை