ETV Bharat / international

காபூல் பல்கலையில் தாக்குதல்: 20 நபர்கள் உயிரிழப்பு - பயங்கரவாத தாக்குதல்

காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

attack at Kabul University
attack at Kabul University
author img

By

Published : Nov 2, 2020, 9:10 PM IST

காபூல் பல்கலைக்கழகத்தில் இன்று புத்தக கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. மாணவர்களை அந்தப் பகுதியை விட்டு அகலச் சொல்லி குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் சபை தலைவர் அப்துல்லா அப்துல்லா, காபூல் பல்கலைக்கழகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கல்வி நிறுவனங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவது கொடூரமான குற்றமாகும். அமைதியாகவும் பாதுகாப்பாகவும் படிக்க மாணவர்களுக்கு உரிமை உள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திறக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.