சீனாவின் கிழக்கே ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.
அங்கு, கடந்த வாரம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 22 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை என அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள 12 பேர் உயிருடன் இருப்பதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், மற்ற 10 பேரின் நிலைமைகள் குறித்த விவரம் வெளியாகவில்லை