போர் தாக்குதலால் நிலை குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உலக வங்கி அவசர கால பொருளாதார உதவி மேற்கொண்டுள்ளது. அதன்படி, போர் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ள உக்ரைன் அரசு அடுத்த சில மாதங்கள் பொருளாதார ரீதியாக தாக்கு பிடிக்க சுமார் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை உலக வங்கி தருகிறது.
மேலும், சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்எஃப் அமைப்பும் விரைவில் உக்ரைனுக்கு நிதி வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஎம்எஃப் உதவி கிடைக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு கூடுதலாக 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி கிடைக்கும். இந்த தகவலை உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மட்டுமல்லாது, போர் காரணமாக அகதிகள் குடிபெயர்வுகளை சந்திக்கும் நாடுகளுக்கும் உதவி செய்ய இரு நிதி அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன. இதுபோன்ற அசாதாரண சூழலில் சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என இரு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க: 'நான் பாசிஸ்ட்டா... மனது வலிக்கிறது' - மரணமடைந்த ரஷ்ய வீரர் தாயிற்கு எழுதிய குறுஞ்செய்தி