பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் கால் கேடாட் நடிப்பில் வெளியான திரைப்படம் வொண்டர் வுமன் 1985. கிறிஸ்துமஸ் வாரத்தில் மட்டும் இந்த படம் 16.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 122 கோடி ரூபாய்) வசூல் ஈட்டியுள்ளது.
இதன் மூலம் கரோனா காலத்தில் பாக் ஆஃப்சில், வெளியான முதல் வாரத்திலேயே 122 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய முதல் படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் மட்டுமல்லாது, முதல் வாரத்தில் உலக சந்தையில் மட்டும் கூடுதலாக 19.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. தற்போது வரை உலக அளவில் 85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக, பாக் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கால் கேடாட்ட்டைக்கொண்டு வொண்டர் வுமன் திரைத் தொடரின் மூன்றாம் படம் எடுக்கப்படும் எனப் படத்தின் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வொண்டர் வுமன் நாயகியின் நினைவுப்பொருள் இதுதானாம்