ETV Bharat / international

கரோனா வைரஸ் : தடுப்பூசியை உருவாக்க ஒன்றரை ஆண்டுகாலம் என்கிறது அமெரிக்கா! - அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர்

வாஷிங்டன் டி.சி : கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் தடுப்பூசியை உருவாக்க ஒன்றிலிருந்து ஒன்றரை ஆண்டுகால அவகாசம் எடுக்குமென பாதுகாப்புத் துறை நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

will-take-12-18-months-to-develop-vaccine-for-coronavirus-mark-esper
கரோனா வைரஸ் : தடுப்பூசியை உருவாக்க ஒன்றரை ஆண்டுகாலம் அவகாசமெடுக்கும் என்கிறது அமெரிக்கா!
author img

By

Published : Mar 18, 2020, 3:22 PM IST

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கோவிட்-19 வைரசால் உலகளவில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகப் பரவிய இதன் தாக்கம் கடந்த 10 நாட்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 6000 பேருக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 105 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. நேற்று அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தி, வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியிலும் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது.

will-take-12-18-months-to-develop-vaccine-for-coronavirus-mark-esper
கரோனா வைரஸ் : தடுப்பூசியை உருவாக்க ஒன்றரை ஆண்டுகாலம் அவகாசமெடுக்கும் என்கிறது அமெரிக்கா!

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர், “ கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க ஒன்றிலிருந்து ஒன்றரை ஆண்டுகால அவகாசம் எடுக்குமென பாதுகாப்புத் துறை நம்புகிறது. சில தனியார் நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் கூறியிருக்கும் காலக்கெடுவை விட விரைவாக ஒரு தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஒரு தனியார் நிறுவனம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டால், பாதுகாப்புத் துறை அவர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்கும்” என குறிப்பிட்டார்

முன்னதாக, மாகாணங்களின் ஆளுநர்கள் கேட்டுக்கொண்டால் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் புதிய கள மருத்துவமனைகள் அமைக்க ராணுவமும் பாதுகாப்புத் துறையும் அனுப்பப்படும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் 500-ஐ தொட்ட கரோனா: நெருக்கடி நிலை அமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.