ETV Bharat / international

கரோனாவைத் தடுக்க உதவும் இரு ஆயுதங்கள் - உலக சுகாதார அமைப்பு ஆய்வு தகவல்

author img

By

Published : Apr 20, 2020, 2:47 PM IST

லண்டன்: சரியான முறையில் கிருமிநாசினி அல்லது சோப்பைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தம்செய்தால் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் ஆய்வு தெரிவிக்கின்றது.

WHO
WHO

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கிவரும் நிலையில் வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, நோய் பாதித்தவர்களைப் பாதுகாக்கும் வேளையில், வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதே கரோனாவிடமிருந்து தப்பிக்க பிரதான வழி எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கரோனாவைக் கட்டுப்படுத்து இரு ஆயுதங்களாக சானிடைசர் என்னும் கிருமி நாசினி, சோப் ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. 30 விநாடிகள் சோப் கொண்டு கைகழுவுவது மூலமாகவோ கிருமிகள் ரசாயன தாக்கத்தால் உடனடியாக செயலற்றுப்போவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 14 முறை கைக்கழுவுவது கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க சிறந்த வழி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆப்கான் அதிபர் அலுவலகத்தில் 20 பேருக்கு கரோனா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.