ETV Bharat / international

ஒரு மாதம் தாமதமாக நிறைவேறிய ஜோ பைடனின் குறிக்கோள் - Joe Biden

அமெரிக்காவில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களில் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி செலுத்திவிட அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டிருந்த நிலையில், இம்மாதம் அவரின் குறிக்கோள் நிறைவேறியது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
author img

By

Published : Aug 3, 2021, 11:27 AM IST

அமெரிக்காவில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 70 விழுக்காட்டினருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை ஜூலை 4ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

ஜூலை 4ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் என்பதால், இலக்கை எட்ட பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அமெரிக்காவில் செயல்படுத்தினார். அதில், இலவச பீர், தடுப்பூசி செலுத்தும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்டவை அடங்கும்.

இருப்பினும், மக்களின் தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஜூலை 4ஆம் தேதிவரை 63 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்த முடிந்தது.

70% மக்களுக்குத் தடுப்பூசி

அதைத்தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சலுகைகள் மூலம் இம்மாதம் 2ஆம் தேதியில் 70 விழுக்காடு மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது.

குறிப்பாக டெல்டா வகை கரோனா தொற்று புளோரிடாவில் அதிகரித்துவருகிறது. மொத்தமாக அமெரிக்காவில் நேற்று மட்டும் 56 ஆயிரத்து 369 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 213 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தைவிட 44 விழுக்காடு அதிகமாகும். இதுவரை அமெரிக்காவில் மூன்று கோடியே 58 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈராக் பிரதமரை சந்திக்கும் ஜோ பைடன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.