ETV Bharat / international

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் நெருங்கிவிட்டோம் - ட்ரம்ப்

author img

By

Published : Apr 24, 2020, 1:17 PM IST

வாஷிங்டன்: கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா முடிவு நிலையை எட்டியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

We are very close to a vaccine: Trump
We are very close to a vaccine: Trump

கரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகள் குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், தொற்று நோய்த் தடுப்பு வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பென்ஸ், அமெரிக்காவில் தற்போதுவரை மக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், பரிசோதனைகளை விரைந்து முடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், தாங்கள் எண்ணியதைவிட பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக தொற்றுநோய் வல்லுநர் அந்தோணி பௌசி நோய்த் தடுப்பு மருந்துகளைக் கண்டறிய குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் கால அவகாசங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்திருந்ததாகவும், பல்வேறு மருத்துவர்களும் இதே கருத்தை கூறியதாகவும் தெரிவித்தார்.

தற்போது, அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், நியு ஜெர்சி, கெனடிகட், டெட்ரோய்ட் உள்ளிட்ட பகுதிகளில் முந்தைய பாதிப்புகளைக் காட்டிலும் தற்போது வைரசின் தீவிரம் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொண்டால் கோடை வருவதற்குள் பாதிப்படைந்துள்ள அனைவரையும் மீட்க இயலும் என்றார்.

மேலும், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா நாடுகளைக் காட்டிலும் கரோனா வைரசிற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறிவதில் முன்னோக்கி சென்றுள்ளதாகவும், விரைவில் தடுப்பு மருந்தினை கண்டறிவதில் வெற்றிபெறுவோம் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் 16 மாகாணங்களை மீண்டும் இயல்புநிலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதாகவும், இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான தனியார் ஆய்வகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் மீண்டும் பொருளாதாரத்தை சீராக்கும் முயற்சியிலும் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் அமெரிக்காவினை மீண்டும் இயல்புநிலைக்குத் மாற்ற ஒவ்வொரு நாளும் தீவிரமாக உழைத்துவருவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க:மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியா...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.