அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் அடக்குமுறையால் உயிரிழந்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கோரியும், இனவாதத்துக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பியும், அந்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மேலும், சமூக வலைதளங்கள் தொடங்கி, உலகம் முழுவதும் இப்படுகொலைக்கு எதிராகப் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், அந்நாட்டின் இண்டியானா நகரில், சுமார் 60 போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து துப்பாக்கிகளைத் தாங்கியபடி நடந்துசெல்லும் காணொலிக் காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாக அமெரிக்காவில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இந்தக் காணொலி பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு எதிராக இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்