ETV Bharat / international

பைடன் அரசில் முக்கியப் பங்காற்றவுள்ள விவேக் மூர்த்தி!

நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்திக்கு அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விவேக் மூர்த்தி
விவேக் மூர்த்தி
author img

By

Published : Dec 4, 2020, 6:54 PM IST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தியை கரோனா தடுப்புப் படை துணைத் தலைவராக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் நியமித்தார். இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அமெரிக்க மருத்துவச் சேவை படைத் தலைவராக அவர் பதவி வகித்துள்ளார். அவர் எழுதிய 'Together: The Healing Power of Human Connection in a Sometimes Lonely World' என்ற புத்தகத்தை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு, அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதையடுத்து, அமெரிக்க மருத்துவச் சேவை படைத் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

எபோலா, ஸிகா உள்ளிட்ட வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். தொடக்க காலத்தில், அவசர மருத்துவச் சேவை ஆற்றியபோது, துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் சிகிச்சை அளித்தார். அப்போது, துப்பாக்கி கலாசாரத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனால், கோபமடைந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள், அவர் அமெரிக்க மருத்துவச் சேவை படைத் தலைவராகிவிடக் கூடாது என்பதற்காக அந்த நியமனத்திற்கு எதிராகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.