ETV Bharat / international

சட்டவிரோதமாக உளவு பார்ப்பதை எதிர்க்கிறோம்- பெகாசஸ் குறித்து அமெரிக்கா

ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக உளவு மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை அமெரிக்கா எதிர்ப்பதாக கூறியுள்ளது.

Use of spying technology against civil society, regime critics, journalists always concerning: US on Pegasus issue
குடிமைச் சமூகத்திற்கு எதிரான சட்டவிரோத உளவுக்கு நாங்கள் எதிரானவர்கள்- அமெரிக்கா
author img

By

Published : Jul 24, 2021, 2:19 PM IST

வாஷிங்டன்: இஸ்ரேல் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய அரசு, ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமைச் செயற்பட்டாளர்களை வேவு பார்த்ததாக கார்டியன், வாஷிங்கடன் போஸ்ட், தி வயர் உள்ளிட்ட ஊடகங்கள் இணைந்து புலனாய்வு கட்டுரையை கடந்த ஞாயிறு (ஜூலை 18) அன்று வெளியிட்டது.

இந்தப் புலனாய்வு கட்டுரையில், இந்தியாவிலுள்ள 300 நபர்கள் வேவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அதில், 40 ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அடங்குவார்கள்.

ஒன்றிய அரசு மறுப்பு

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் திங்கள்கிழமை (ஜூலை 19) ஒன்றிய அரசு மறுத்தது. "இந்தியாவில் கண்காணிப்பதற்கென்று தனி நெறிமுறைகள் உள்ளன. நம் அரசியல் சட்டமைப்பின் படி சட்டவிரோதமாக யாரையும் வேவு பார்க்க முடியாது" என நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

ஒன்றிய வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் மீனாட்சி லோகி, புனையப்பட்ட, சான்றுகள் குறைவாக உள்ள அந்த கட்டுரைகள் அவதூறு பரப்புவதாகத் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் கருத்து

இந்நிலையில், அமெரிக்காவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் பிளிங்கனின் இந்திய வருகையையொட்டி செய்தியாளர்களை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி செயலாளர் தாம்சன் சந்தித்தார்.

அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய போது, "ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பட்டாளர்கள் போன்றவர்களை இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக உளவு பார்ப்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்" என்றார்.

மேலும், "இது பெரிய பிரச்சினை என்பது எனக்கு தெரியும். இந்தியாவின் விஷயத்தில் இது குறித்த குறிப்பிட்ட பார்வை எனக்கு இல்லை. ஆனால், தங்கள் தொழில்நுட்பம் இந்த வகைகளில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வழிகளை கண்டறிய வேண்டும் என நாங்கள் குரல் கொடுத்தோம். தொடர்ச்சியாக அதனை நாங்கள் வலியுறுத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க: டெலிபோன் ஒட்டுக்கேட்பு- மோடி அரசுக்கு சு.சுவாமி எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.