ETV Bharat / international

'இந்தியா-சீனா பிரச்னையை அமெரிக்க உன்னிப்பாக கவனித்து வருகிறது'

author img

By

Published : Oct 23, 2020, 1:08 PM IST

வாஷிங்டன்: இந்தியா-சீனா எல்லை பிரச்னையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அந்நாட்டின் முதன்மை துணை உதவி செயலாளர் டீன் தாம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா பிரச்னை அமெரிக்க உன்னிப்பாக கவனித்து வருகிறது!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அக்டோபர் 25 முதல் 30ஆம் தேதிவரை பயணம் மேற்கொள்கிறார்.

இந்திய அலுவலர்கள் வழிநடத்தும் மூன்றாவது வருடாந்திர அமெரிக்க இந்திய 2+2 அமைச்சர்களுக்கு இடையேயான உரையாடலில் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பெர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான 2+2 சந்திப்பு குறித்து ஊடகங்களுடன் பேசிய அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் டீன் தாம்சன், "உண்மையான கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலவும் சூழல் குறித்து, இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படலாம். இந்தியா-சீனா எல்லை பிரச்னையை அமெரிக்க உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பரிமாற்றம், ஒத்துழைப்பு, ஒப்பந்தம் (BECA) மற்றும் பிற ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளன. பாம்பியோ, மார்க் எஸ்பரின் இந்திய பயணத்தின்போது, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்கா-இந்தியா உறவு துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 2+2 சந்திப்பு அமெரிக்காவும் இந்தியாவும் வலுவான, பாதுகாப்பான, வளமான நாடு என்ற நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இந்த கலந்துரையாடல் உலகளாவிய ஒத்துழைப்பு, தொற்றுநோய், இந்தியா-பசிபிக் சவால்கள் குறித்து கவனம் செலுத்தும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.