ETV Bharat / international

பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் துணை அதிபர்! - கரோனா தடுப்பூசி

வாஷிங்டன்: மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களது முன்னிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார்.

US Vice Prez
US Vice Prez
author img

By

Published : Dec 17, 2020, 2:34 PM IST

கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்களுக்குப் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களது முன்னிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார். வெள்ளை மாளிகையின் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக் குழுவின் தலைவராக உள்ள மைக் பென்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி கரேன் பென்ஸ் சர்ஜன் ஜெனரல் ஜெரோம் ஆடம்ஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து மைக் பென்ஸ் கூறுகையில், "தாமதப்படுத்தும் தேவையற்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற போதிலும், கரோனா தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களில் எந்த ஒரு தயக்கமுமின்றி கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள எதிர்நோக்கிக் காத்துக்கொண்டுள்ளேன்" என்றார்.

முன்னதாக, ஃபைசர் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசியை இடைக்கால பாதுகாப்புத் துறை அமைச்சர் கிறிஸ் மில்லர் போட்டுக்கொண்டார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், தான் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.