அமெரிக்காவின் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிவருகிறது. அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூட, “தான் கொரோனா வைரஸ் சோதனைக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டேன்” என கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் தேசிய சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டின் அரசு செயலர் மைக் பாம்பே, “கொரோனா வைரஸை வூகான் வைரஸ் என்று விமர்சித்தார். கொரோனா வைரஸின் உற்பத்தி தொழிற்சாலை சீனா என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மைக் பாம்பேவின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட்டரில் கருத்து பதிவிட்ட ஜா, அமெரிக்க ராணுவம் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிவிட்டதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சீன தூதருக்கு அமெரிக்கா சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனில் அமெரிக்காவுக்கு எதிராக கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கொரோனாவுக்கு எதிராக ஒரு உலகப்போர்