வாஷிங்டன் : அமெரிக்காவை மீண்டும் கரோனா பாதிப்புகள் மிரட்டத் தொடங்கியுள்ளன. திங்கள்கிழமை (ஜன.3) மட்டும் ஒரே நாளில் ஒரு மில்லியன் (10 லட்சம்) பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளில், கடந்த தினத்தை விட சுமார் 1,42,000 அதிகமான பாதிப்பாளர்கள் மருத்துவ சிகிச்சை கோருவதை பார்க்க முடிகிறது.
அமெரிக்காவில் கடந்த ஒரு வார காலமாகவே கோவிட் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக ஐந்தில் ஒரு பங்கு பாதிப்புகள் சனிக்கிழமையும், மூன்றில் ஒரு பங்கு பாதிப்புகள் ஞாயிற்றுக்கிழமையும் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில் இந்நிலைமை தொடர்ந்தால் இந்த வாரத்தில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, 55 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 வழக்குகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. அதாவது நாட்டில் ஒவ்வொரு ஆறு பேரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், திங்களன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 12 முதல் 15 வயதிற்குள்பட்ட இளைஞர்களை சேர்க்கும் வகையில் Pfizer-BioNTech கரோனா வைரஸ் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை விரிவுபடுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா பாதிப்பு!