ETV Bharat / international

ரஷ்யாவின் 'உயிரி ஆயுத' நடவடிக்கை குற்றச்சாட்டு: முட்டாள்தனமானது என உக்ரைன் மறுப்பு

உக்ரைனில் அமெரிக்க நிதியுதவியுடன் உயிரி ஆயுத திட்டம் (biological weapons activities) மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்யா கூறிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா, உக்ரைன் அரசுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.

biological weapons activities
biological weapons activities
author img

By

Published : Mar 10, 2022, 11:33 AM IST

வாஷிங்டன்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்.24ஆம் தேதி முதல் போர் தொடங்கியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் அமெரிக்காவின் நிதியுதவியுடன் உயிரி ஆயுத திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது. உயிரி ஆயுதம் தயாரித்ததற்கான தடயங்கள் அவசரமாக அழிக்கப்பட்டதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாக ரஷ்யா கூறியது.

ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பதிலளித்துள்ளது. அதில், "இதுபோன்ற அப்பட்டமான பொய்களை கிரெம்ளின் வேண்டுமென்றே பரப்புகிறது. PRC (சீனா) அலுவலர்கள் இந்த சதி கோட்பாடுகளை எதிரொலிப்பதாக பார்க்கிறோம்" என்று கூறியுள்ளது.

biological weapons activities
biological weapons activities

மேலும், உக்ரைன் அரசும், "ரஷ்யாவின் இந்த தகவல் முற்றிலும் முட்டாள்தனமானது. தவறானது. மற்ற நாடுகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது ரஷ்யாவிற்கு புதிதல்ல. இந்த பொய்யான தகவல் மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டு வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியில் ரஷ்யா தவறான தகவலை பரப்புகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமாஜ்வாதியின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த தலைமை தேர்தல் ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.